Monday, January 30, 2006

2. இது தேவையா?

வெட்டித்தனமா செய்திவிமர்சனங்கள் மட்டும் செய்துவந்த எனக்கும் ஒரு பேராசை, பொருந்தா ஆசை ஏற்பட்டது. என்ன அந்த ஆசை என்றால் எனக்கு பிடித்த, கொஞ்சமாய் பரிச்சயமான பாடல்களுக்கு ரொம்பவும் தீய்ந்த தமிழிலெல்லாம் விளக்கம் சொல்லாமல், எளிய கிட்டத்தட்ட பேச்சுத்தமிழில் விளக்கம், அல்லது எனக்கு அப்பாடலிலிருந்து என்ன புரிந்தது என்று சக பதிவாளர்களுக்கும் தெரியும் வகையில் எழுதலாமே என்பது அது. இவன் என்னவோ புதிதாக வீனஸிலிருக்கற மொழியில் ஏதோ எழுதிவிட்டு, சும்மா இல்லாம இதை தமிழ்னு வேற கதை விடறானேன்னு படிக்கறவங்க டென்சன் ஆகாம எழுதுவதே நோக்கம். நான் தமிழ் அறிஞனுமல்ல. மாணவனுமல்ல. சொல்லப் போனால் தமிழைக் இதுவரைக் கற்காமல், இப்போதுதான் தமிழென்பது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆவலில் புறப்பட்டிருப்பவன்.

மேலும், இத்தகைய ஒருவன் என்ன தைரியத்தில் மற்றவர்களுக்கு தீந்தமிழ் பாக்களுக்கு விளக்கமளிக்க வந்திருக்கானென்று தாங்கள் கேட்குமுன் நானே விடையளித்துவிடுகிறேன். உங்களுக்கு புரியும் வகையில் சொல்வது மட்டுமே என் நோக்கமல்ல. மாறாய், எனக்கு நானே பழந்தமிழின் சுவையை உணர்ந்து கொள்ள ஒருவகைத் தேடலே இப்பதிவு. அத்தகைய தேடலில் எனக்கு புரிந்ததை, என்னைப் போலவே என் அஞ்ஞான நிலையிலேயே இருப்போரிடம் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. (ஆஹா! தேடல் அப்டி இப்டியெல்லாம் வார்த்தை ஜாலம் போட்டு சாஹித்ய அகாடமி ரேஞ்சுக்கு போயிட்டடா இராமநாதா!) இப்படியெல்லாம் சொல்லும் போதே இவன் சொல்லும் விளக்கங்களில் தவறுகள் இருக்கத்தான் செய்யும் என்பது விளங்கியிருக்குமே?

அந்த மாதிரி தப்பு இருந்தா நாலு உதை கொடுத்து என்னை திருத்தவேண்டியது உங்களோட வேலை. மேலும், நான் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருக்காம, நீங்களும் கலந்து கட்டி அவியல் தயார் செய்யலாம். எப்படி? படிச்சுட்டு.. ஆமா/இல்ல, புடிச்சுது/தாங்க முடியல சாமி, அடி வாங்க ஆசையா/இல்லியா, நன்னி/நன்றினு நிறுத்திடாம, உங்களுக்கு என்ன தோணுதுனும் எழுதுங்க.

இதைப் பத்திதான் எழுதணும்னு இன்னும் தீர்க்கமா முடிவு பண்ணல. இப்போதைக்கு கொஞ்மா கந்தர் அநுபூதியும் ரொம்ப கொஞ்சமா திருவருட்பா எடுத்து உளறலாம்னு ஆசை. பார்ப்போம்.

இப்பதிவைக் கண்டு நொந்து போனீர்களானால், இம்முயற்சியை நான் துவக்கக் காரணமாயிருந்த இராகவன், ஆன்மிக சூப்பு, ஞானவெட்டியான் ஐயா, தி.இரா.ச மற்றும் ஜோசப் சாருக்கு உங்களின் அழுகிய தக்காளிகளையும், முட்டைகளையும் பார்சல் அனுப்புமாறு வேண்டுகிறேன். இத்தகைய சூரியன்களைப் போல நான் ஒருநாளும் ஆக முடியாது. ஆனாலும் என் சிறிய இறக்கைகளை சிலுப்பிக்கொண்டு இந்நெடிய பயணத்தைத் தொடங்குகிறேன். ஒரு நிலாவாகவாவது ஆவேனோ? அல்லது எரிந்து சாம்பலாய்த்தான் போவேனோ?

எதுவாகினும் தாமிருக்க பயமேன் என்று கைகாட்டும் கந்தனை என் வழிகாட்டியாய் நம்பி...

பிரியத்துடன்,
இராமநாதன்

27 comments:

said...

test

said...

Good Job Ramanathan.

Padichchuttu karutthu piRaku...

varavaeRpu ippa.

-Mathy

said...

இராமநாதன், நல்ல முயற்சி வாழ்த்தி வரவேற்கிறேன். படித்து நிறையத் தெரிந்துக் கொள்ளக் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு
அந்தச் சுப்பன் பாதம் போற்றும்
ஆன்மிகச் சூப்பு.

said...

மதி,
நன்றி.

சொன்னா மாதிரி வந்து பின்னர் கருத்தும் சொல்லுங்க. :)

said...

ஆன்மிக சூப்பு,
வாழ்த்துக்கு நன்றி.

வை.சூப்பு வந்தாச்சு, சைவ. சூப்ப காணுமே? :((

said...

மிஸ்டர் கேஸ்பரோ.. உருப்படியான வேலை...வரவேற்கிறேன்.

said...

வரவேற்கிறேன்! வருக வருக!!

NJ

said...

நன்றி இகாரஸ் பிரகாஷ் மற்றும் NJ.

said...

இராம்ஸ். வை. சூப்பா? நான் தான் தெளிவா சுப்பன் பாதம் போற்றும்ன்னு போட்டிருக்கேனே. எங்க ஊருல சுப்பன்னா முருகன்னு அர்த்தம்.

இராகவன் வேணுமானா சை.சூப்பா இருக்கலாம். ஆனா நான் எப்பவுமே சை.சூப்பு, வை.சூப்பு, சா.சூப்பு, கௌ.சூப்புன்னு இன்னும் நிறைய சூப்புக்கள் கலந்து செய்த காக்டெய்ல். :-)

said...

அன்பு இராமநாதன்,

நான் உண்டு; என் வலைப்பூ உண்டு; என ஏதேதோ உளறிக் கொட்டி கொண்டிருக்கிறேன்; ஒரு மூலையில்.

என்னையும் அழைத்து வம்வில் மாட்டி விட்டுவிட்டீர்களே!

said...

மன்னித்துவிடுங்கள் கா.சூப்பு!

said...

ஞானவெட்டியான் ஐயா,
//என்னையும் அழைத்து வம்வில் மாட்டி விட்டுவிட்டீர்களே!//
உங்களை மாதிரி பெரியோர்கள் எல்லாம், என்னை மாதிரி பச்சாக்கள் சொல்லும் கருத்துகளில் உள்ள தவறுகளை திருத்தவேண்டும் என்கிற ஆசையே காரணம்.

நன்றி.

said...

ஆஹா, இது நட்சத்திர வார தாக்கமா? குமரனுக்கு ஜே ஜே!
உங்கள் முயற்சிக்கு நன்கு வளர வாழ்த்துக்கள் !

said...

//இதைப் பத்திதான் எழுதணும்னு இன்னும் தீர்க்கமா முடிவு பண்ணல. இப்போதைக்கு கொஞ்மா கந்தர் அநுபூதியும் ரொம்ப கொஞ்சமா திருவருட்பா எடுத்து உளறலாம்னு ஆசை. பார்ப்போம்.//

கலிங்கத்துபரனி?
இதை எனக்கு படிக்கனும்ன்னு ரொம்ப நாளா ஆசை இராமநாதன்.

எல்லோரும் சாமிய பத்தி எழுதினா எப்படி...சும்மா சாமிய நோண்டிகிட்டு.... அவருக்கு கொஞ்சம் ரெஸ்ட் விடுங்கபா!

:-)

said...

மணியன், சில வாரங்களாகவே இந்த எண்ணம் இருந்தாலும்.. குமரனும் இராகவனும் இந்த என் நப்பாசைக்கு முக்கிய காரணங்கள்.

ஒரே வித்தியாசம். அவர்கள் ஏற்கனவே படித்ததை பதிகிறார்கள். நான் புதிதாய் தெரிந்து கொள்ள பதிகிறேன்.

நன்றி

said...

சமுத்ரா,
நன்றி..

நான் கலிங்கத்துபரணீயை படிச்சதில்லீங்களே... :(

சொல்லப்போனா, போன பின்னூட்டதுல சொன்ன மாதிரி புதுசா படிக்கவே இந்தப் புது வலைப்பூ.

//கொஞ்சம் ரெஸ்ட் விடுங்கபா!//
:))

நன்றி

said...

எல்லாரும் ஒரு மார்க்கமாதான் போறீங்க, ஹ¥ம் .. நல்லா இருந்தா சரி :-)
ஙே என்று விழித்தப்படி,
உஷா

said...

இராமநாதன், நான்கைந்து நாட்களாக நான் தமிழ்மணம் பக்கம் சரியாக வராமல் இருந்ததால் இதைக் கவனிக்காமல் விட்டு விட்டேன்.

இந்த முயற்சி திருவினையாக்கும் என்பதில் ஐயமில்லை. அறிவு என்பதே அறியாமையை அறிவதுதான். எப்படி என்கிறீர்களா? சோப்பு என்பதே அழுக்கு. அந்த அழுக்கைக் கொண்டுதான் பாத்திரத்திலுள்ள அழுக்கைப் போக்குகிறோம். கடைசியில் இரண்டும் போகிறதுதானே. அதுதான் உயர்ந்த நிலை. எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அது நோக்கி முயற்சியேனும் செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த முயற்சி நிச்சயம் திருவினையாக்கும்.

எனது வாழ்த்துகள்.

said...

// இராகவன் வேணுமானா சை.சூப்பா இருக்கலாம். ஆனா நான் எப்பவுமே சை.சூப்பு, வை.சூப்பு, சா.சூப்பு, கௌ.சூப்புன்னு இன்னும் நிறைய சூப்புக்கள் கலந்து செய்த காக்டெய்ல். :-) //

மாட்டிக்கிட்டீங்களா குமரன். :-) நான் சைவ அசைவ சூப்பு. அசைவத்தில் எல்லாமே அடங்குந்தானே!

said...

// கலிங்கத்துபரனி?
இதை எனக்கு படிக்கனும்ன்னு ரொம்ப நாளா ஆசை இராமநாதன். //

சமுத்ரா, மிகவும் அருமையான நூல். நானும் படிக்க வேண்டும். பிரிதொரு சமயத்தில் கண்டிப்பாகப் பார்க்கலாம். யார் கண்டார்....நடுவிலேயே இராமநாதன் கலிங்கத்துப் பரணி பாடினாலும் பாடி விடுவார். குமரனையும் இந்த விஷயத்தில் நம்ப முடியாது.

said...

இராமநாதன்,

இந்த வலைபூவில் மென்நூல் ஆக்கம் வசதிகள் இல்லயே!

அதையும் enable பன்னிடீங்கனா என்ன மாதிரி ஆளுக PDF formatல download பன்னி வச்சிக்குவோம்.

எதையாவது செய்ய சொல்லிகிட்டே இருக்குறானே இவன என்ன பன்னலாம்ன்னு நிங்க யோசிக்கறது புரியுது.

said...

//சமுத்ரா, மிகவும் அருமையான நூல். நானும் படிக்க வேண்டும். பிரிதொரு சமயத்தில் கண்டிப்பாகப் பார்க்கலாம். யார் கண்டார்....நடுவிலேயே இராமநாதன் கலிங்கத்துப் பரணி பாடினாலும் பாடி விடுவார். குமரனையும் இந்த விஷயத்தில் நம்ப முடியாது.
//

மிக்க நன்றி ராகவன்.

said...

உஷா அக்கா,
//நல்லா இருந்தா சரி :-)ஙே என்று விழித்தப்படி,

//

ஆன்மிக ஓவர்டோஸா ஆயிடுச்சோ? நான் பள்ளிக்கூட தமிழ் வகுப்பு மாதிரி தானே எடுக்கறேன்னு மதியே செர்டிபிகேட் கொடுத்துட்டாங்களே! :))

said...

ஜிரா,
//சைவ அசைவ சூப்பு.//
இது என்ன புதுசா? சுத்த சைவ மிலிட்டரி ஹோட்டல் மாதிரி?? ஹி ஹி..

கலிங்கத்துபரணில்ல எதப் பத்தி சொல்லிருக்காங்கன்னே தெரியாதே..:( அத இனிமே வாங்கி படிச்சு போடறதுக்குள்ள விடிஞ்சிடும். சமுத்ரா.. நீங்களே தொடங்கினா என்ன??

said...

சமுத்ரா,
தமிழ்மண பட்டை சரியா நிறுவியிருக்கே. அதே போல, அவங்க சொன்னா மாதிரி கோடையும் சேர்த்திருக்கேனே? இன்னமும் மின்னூல் வசதி வேலை செய்யலியா?

காசி விஸ்வநாதருக்கே வெளிச்சம்! எதுக்கும் இன்னொரு முறை சரிபார்க்கிறேன்.

//எதையாவது செய்ய சொல்லிகிட்டே இருக்குறானே இவன என்ன பன்னலாம்ன்னு நிங்க யோசிக்கறது புரியுது.
//
அப்படியெல்லாம் இல்ல. நீங்க தாராளமா கேக்கலாம். அதுல எனக்கும் புதுசா தெரிஞ்சிக்க ஆர்வம் வருதில்ல. அதனால் எல்லாருக்கும் நல்லதுதான்.

said...

//கலிங்கத்துபரணில்ல எதப் பத்தி சொல்லிருக்காங்கன்னே தெரியாதே..:( அத இனிமே வாங்கி படிச்சு போடறதுக்குள்ள விடிஞ்சிடும். சமுத்ரா.. நீங்களே தொடங்கினா என்ன?? //

இராமநாதன்,
அனபாய குலோதுங்க சோழனின்(1070-1120) கலிங்த்து படைஎடுப்பை பற்றி ஜெயங்கொண்டர்(Jayamkondar) எழுதியது தான் கலிங்கத்துபரனி.

மிகவும் உக்கிரமாக நடந்த போர் இது.
ஆங்கிலத்தில் "War of Wars" என்பார்களே அது மாதிரி.

மதுரை திட்டம் - கலிங்கத்துபரனி

முருகவேள் துதி....

//சமுத்ரா.. நீங்களே தொடங்கினா என்ன??
//

அதுக்கு தமிழ் தெரியனுமே!
எதோ தினதந்தி படிச்சு அந்த தமிழ வச்சு காலத்த ஒட்டிகிட்டு இருக்கேன்.

//இன்னமும் மின்னூல் வசதி வேலை செய்யலியா?
//

எதுக்கும் இங்க போயி பாருங்க.

said...

சமுத்ரா,
கலிங்கத்துப்பரணி சுட்டிக்கு நன்றி.

மீண்டும் டெம்ப்ளேட்டில் நோண்டிப் பார்க்கிறேன். நன்றி.