Thursday, February 02, 2006

9. அனுபவங்காண் பெருந்தகையே!

வள்ளலாரின் பிரபலமான பாடல்களில் ஒன்று இது. நம்மில் பெரும்பாலானோர் பள்ளிநாட்களில் இப்பாடலை மனப்பாடம் செய்திருப்போம்.

தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.

தேன்படிக்கும் அமுதாம் உன்திருப்பாட்டைத் தினந்தோறும்
பரமேஸ்வரனின் புகழ்ப்பாடும் பாட்டெல்லாம் பொதுப்பாட்டே. புதுப்பாட்டே என்று முன்னர் பார்த்தோம். அவை திருப்பாட்டும் அல்லவா? இங்கு திரு என்பதற்கு புனிதமான என்று அர்த்தம் கொள்வோம். அவனைப் பாடும் பாட்டுகள் எத்தகையவை? பொதுவாகவே, ஒரு மனிதரைக் குறித்த பாட்டைவிடவும் இறையின் மீது பாடப்படும் பாடல்களுக்கு சுவை அதிகம். இந்த ஒப்பீடே தவறு என்று நீங்கள் சண்டைக்கு வரலாம். ஆனாலும், வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள உதவும் என்பதால்.

'என் தலைவா, நீ இருக்க எனக்கு என்ன கவலை? என் மன்னவா, உன்னை இந்த நாடே போற்றுதே!' என்று இளையத் தளபதி விஜயைக் குறித்து பாடலாம். அப்படி பாடல்கள் வந்தும் உள்ளன. இவர் தமிழ்சினிமாவின் இளையதளபதி. இன்னொரு இளைய தளபதி இருக்கிறான். அவனே அண்டசராசரங்களுக்கும் உண்மையான இளைய தளபதி. வேறு யார்? என்றும் இளையவனான தேவசேனாதிபதியான முருகனே. ஒருவர் மேல் பாடப்படும் பாடலை ஒரு வரிகூட மாற்றாமல் மற்றவர்க்கும் பாடமுடியும். மேற்சொன்ன உதாரணப் பாடலையே எடுத்துக்கொள்ளுங்கள். அது விஜயின் அடுத்த படத்தில் அதிரடி எண்ட்ரி பாடலாக இருக்கலாம். அல்லது, கோயிலில் முருகனை நினைத்து இட்டுக்கட்டியும் பாடலாம். இல்லையா? ஆனால், எது தித்திக்கும்? பக்தியுடன் பாடப்படும் கந்தனைக்குறித்த பாடலே தித்திக்கும் என்ற முடிவுக்கு வர சிந்திக்கவும் வேண்டுமா? ஏன் என்ற கேள்வியும் வருகிறதல்லவா? காரணம் ஒன்றுமில்லை. இறைவனின் திருநாமங்களையும், அவன் புகழையும் பாடும்போது அவனின் அருளையும் இயல்பிலேயே அப்பாடல் பெற்றுவிடுகிறது. சுருதிச் சுத்தமாக பாடவேண்டுமென்பது கூட இல்லை. பஜனைக் கோஷ்டிகளை கேட்டிருக்கிறீர்கள் தானே? ஆளாளுக்கு ஒரு கட்டையில் பாடிக்கொண்டிருப்பார்கள். இருந்தும் காதுக்கு இனிமையாகத்தான் இருக்கும். அதுவே இறைவனின் கடாக்ஷம். பாடல் சுத்தமான சங்கத்தமிழில் இருக்கவேண்டுமென்பதும் இல்லை. 'பழம் நீயப்பா', 'திருச்செந்தூரின் கடலோரத்தில்' ஆரம்பித்து அண்மையில் வந்த 'அன்பென்ற மழையிலே' வரை இதைக்காண முடியும். விஷயத்தை விட்டு ரொம்ப தூரம் போய்விட்டோமென்று நினைக்கிறேன்.

அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..

நான்படிக்கும் போதென்னை நானறியேன்
நான் பாடும்போது என்னையே பக்தியில் மறந்து எனக்கே நான் யார் என்று அறியாத ஆனந்த நிலையில் மூழ்கிவிடுகிறேன்.

நாஒன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும்
நா என்றால் நாக்கு. ஒலி வருவது நாக்கிலிருந்துதான். ஆனால் என் நாக்கு ஒன்று மட்டுமா உன்னைப் பாடுகிறது? இல்லை என் ஊனின் (உடல்) ஒவ்வொரு அணுவும் உன் புகழ்பாடுகிறது. என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.

உயிர்க்குயிரும் தான்படிக்கும்
உயிருக்குயிர் என்பது என்ன? நம்ம ஆன்மாவே. அது இல்லாமல் உயிர் என்பது இல்லை. நமது உயிருக்கு ஆதாரமானது ஆன்மா. நம்மின் உள்ளுக்குள்ளே இருந்து நம்மை ஆட்டிவைப்பது அதுவே.

மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.

அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே
உடல், உயிர், ஆவி கொண்டு நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? கண்டருள மாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.

----
அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..
என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.
மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.
நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.
----

இப்பாடல் மூலம் வள்ளலார் தான் அனுபவிப்பதை இறைவனுக்கு சொல்வதாய் பாடி, நம்மைப் போன்றவர்களுக்கு இறைவனின் பாடல்களை எத்தனை சிரத்தையுடன் எப்படி அவனிடமே ஊன்றிப்போய் பாட வேண்டும் என்று சின்னப்பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பது போல் எளிதாக விளக்குகிறார். நாளைக்கு இறைவனின் திருப்பாடல்களை பாடுகையில் எப்படி இனிக்கிறது என்று சொல்லுவார். அது என்ன பாட்டுன்னு யூகியுங்களேன். நிறைய பாடல்கள் இருக்கிறதே.

18 comments:

said...

இராமநாதன், நல்ல விளக்கம் சொல்லியிருக்கின்றீர்கள்.

தேன்படிக்கும் அமுதாம் உன்திருப்பாட்டைத் தினந்தோறும் என்ற வரிக்கான விளக்கம் ஒன்றே போதும். மித்ததெல்லாம் கொசுறு. அல்லது அதிகப்படியான பரிசு.

// நான்படிக்கும் போதென்னை நானறியேன்
நான் பாடும்போது என்னையே பக்தியில் மறந்து எனக்கே நான் யார் என்று அறியாத ஆனந்த நிலையில் மூழ்கிவிடுகிறேன். //

தேவ தேவாதி தேவா! எனக்கும் இந்த இன்பம் வாய்க்காதா!

சத்தியமாகச் சொல்கிறேன். வள்ளலாரின் வாக்கு கண்ணம்பாடி அணையைத் திறந்து விட்டன. நன்றி. நன்றி.

said...

மிக்க நன்றி இராகவன்.

// மித்ததெல்லாம் கொசுறு. அல்லது அதிகப்படியான பரிசு.
//
அப்ப நம்மள "குங்ங்ங்குமம்ம்ம்" னு சொல்றீங்களா? :)))

said...

//'அன்பென்ற மழையிலே' வரை இதைக்காண முடியும்//

எனக்கு மிகவும் பிடித்த பாடல் ராமநாதன்.

//ஒரு மனிதரைக் குறித்த பாட்டைவிடவும் இறையின் மீது பாடப்படும் பாடல்களுக்கு சுவை அதிகம். //

உன்மை.

மனிதன் மாறிவிடுவான், ஆகவே அவன் மீது இன்று நாம் என்ன பாடுகிறோமோ அது நாளை தவறாக ஆகிவிடும்.

//அணையைத் திறந்து விட்டன.//

ராகவன்,

அடுத்த தடவை தமிழ்நாட்டில் தன்னீர் பஞ்சம் வரும் போது என்ன செய்ய வேண்டும் என்ற எனக்கு தெரிந்துவிட்டது.

;)

said...

நன்றி சமுத்ரா,

ஆம். இறைவனைப் பாடும் பாடலே நிலைத்து நிற்கும்.

ஜிரா காலை ஏன் வாருறீங்க? :)

said...

//அப்ப நம்மள "குங்ங்ங்குமம்ம்ம்" னு சொல்றீங்களா? :)))//

குங்குமம்மான்னு தெரியாது. ஆனா பதிவு சும்மா தமிழ்முரசு மாதிரி நச்சுன்னு இருக்கு. :) (comparison contentsக்கு இல்லை)

//தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன்//

திருப்பாட்டுகள் படித்ததில்லை. ஆனால் இராம்ஸ், ராகவன், குமரன் அவர்கள் விளக்கி சொல்லும் இந்த வலைப்பூக்களை படிக்கும் போதே அப்படித்தான் இருக்கிறது. தினந்தோறும் படிக்க வேண்டும் விடயம். (சரியான ராகத்தில படியுங்கடோய்)

said...

நன்றாக உள்ளது

said...

// ராகவன்,

அடுத்த தடவை தமிழ்நாட்டில் தன்னீர் பஞ்சம் வரும் போது என்ன செய்ய வேண்டும் என்ற எனக்கு தெரிந்துவிட்டது. //

அட! அப்படி நடக்குமுன்னா சொல்லுங்க. நான் தயார்தான்.

கோடைல தஞ்சாவூர்ப் பக்கம் நண்பர்களோடு போயிருந்தேன். அந்த நெலமையைப் பாத்து வயிறெரிஞ்சு மனசெரிஞ்சி ரொம்பவே நொந்து போயி திரும்பி வந்தேன். என்னோட மனது எத்தன தடவை அத நெனச்சு மருகுச்சுன்னு எனக்கே தெரியாது. அட! வெள்ளம் வந்துருச்சுங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. வெள்ளத்துனால கொஞ்சம் பிரச்சனைகள் இருந்தது உண்மைதான். ஆனா தண்ணியப் பாத்த மக்கள் கண்ணுல இருந்த சந்தோஷத்துக்கு முன்னாடி அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.

said...

// அப்ப நம்மள "குங்ங்ங்குமம்ம்ம்" னு சொல்றீங்களா? :))) //

ம்ம்ம்ம்ம்......நல்ல கேள்வி. இந்த விஷயத்துல குங்குமத்துக்கு முன்னோடி தினமலர்தான். அப்ப அது யாரோ?

said...

கொத்தனாரே,
//தமிழ்முரசு மாதிரி நச்சுன்னு இருக்கு//
இதுக்கு நன்னி!

said...

என்னார்,
நன்றி

said...

ஜிரா,
//வெள்ளத்துனால கொஞ்சம் பிரச்சனைகள் இருந்தது உண்மைதான். ஆனா தண்ணியப் பாத்த மக்கள் கண்ணுல இருந்த சந்தோஷத்துக்கு முன்னாடி அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.
//
உண்மைதான்.

//குங்குமத்துக்கு முன்னோடி தினமலர்தான். அப்ப அது யாரோ?
//
நானும் சொல்லத்தான் வேணுமா? :)

said...

//ஆனா தண்ணியப் பாத்த மக்கள் கண்ணுல இருந்த சந்தோஷத்துக்கு முன்னாடி அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.//

சும்மாவா சொன்னாரு இக்பால்..

go'dee me' khe'l tee hai is kee hajAro'm nadiyA |

gulshan hai jinke' dam se', ras ke' jinA hamArA ||

A thousand rivulets play in its lap, and due to them it has become the envy of the heavens.

said...

சமுத்ரா,
என்ன ஆங்கில கவிதையெல்லாம் புகுந்து விளையாடுது.. நடக்கட்டும் :))

ஒரு வரில விளக்கம் சொன்னா விட்டுடுவோமா. பதிவு போடவேணாம்?

said...

அருமையான பாடல் இராமநாதன். உண்மையைச் சொன்னால் இப்போது தான் இந்தப் பாடலை முதன்முறையாகப் படிக்கிறேன். பள்ளியில் படித்ததில்லை. பின்னரும் படித்ததில்லை. பாடலுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி.

said...

வான் கலந்த மாணிக்க வாசக உன் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்ருடன் தேன் கலந்து, பால் கலந்து தெவிட்டாத இளநீர் கலந்து ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே என்ற திருவாச்கத்தை ஒட்டிய பாடலின் பொருளை ஒத்து இருப்பதுபோல தோன்றுகிறது.

said...

குமரன்,
நன்றி.

பித்தரென்று பெயர்படைத்தார்க்குல்ல செல்வன் பதில் சொல்லிட்டாரு. உங்களுக்குத்தான் வெயிட்டிங்.

said...

தேன் துளி,
நன்றி. 'வான்கலந்த மாணிக்க வாசக' வும் அடிகளார் பாடுனது தானே. அதுதான் இன்னிய பதிவு.

திருவாசகத்திலும் இதே மாதிரி இருக்கா?

said...

திருவாசகத்தின் சிறப்பை ஒட்டிய என்பதால் அப்படி சொன்னேன். பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்